Home கொழும்பு அதானி-செல்லாக்காசு:அனுர!

அதானி-செல்லாக்காசு:அனுர!

by ilankai

மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் அதானிக்கு ஒதுக்கப்பட்ட காற்றாலை மீள்புதுப்பிக்கதக்க சக்தி திட்டத்தை இலங்கை தனியார் வர்த்தகரிடம் கையளிக்க அனுர அரசு முற்பட்டுள்ளது. 

புதுப்பிக்கத்தக்க சக்தித் திட்டத்திலிருந்து அதானி குழுமம் விலகியதைக் குறிப்பிடும் முகமாக, அலகொன்றுக்கு அதானி குழுமத்தால் மதிப்பிடப்பட்ட தொகை நியாயமானதா என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வினவியுள்ளார்.

இலங்கையை விட்டு அதானி குழுமம் வெளியேறியது தொடர்பான சிலரின் கரிசனைகளுக்கே ஜனாதிபதி திஸாநாயக்க பதிலளித்திருந்தார்.

எந்தவொரு நாடென்றாலும் மிகக் குறைந்த தொகையை மதிப்பிடுபவர்களுக்கே மீளப்புதுப்பிக்கத்தக்க சக்தித் திட்டங்களை தனது அரசாங்கம் வழங்குமென்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மிகக் குறைந்ததாக அலகொன்றுக்கு பெறுமதியை மதிப்பிட்ட உள்ளூர் நிறுவனமொன்றுக்கு திட்டமொன்று வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

எனினும் முன்னதாக நேற்றைய தினம் இலங்கையின் எரிசக்தி துறை அமைச்சர் கொழும்பில் இந்திய துணைதூதரை சந்தித்து பேசியிருந்தார்.

அப்போது மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் அதானிக்கு ஒதுக்கப்பட்ட காற்றாலை மீள்புதுப்பிக்கதக்க சக்தி திட்டம் தொடர்பில் அதானியுடன் பேசத்தயார் என தெரிவித்துமிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles