Home யாழ்ப்பாணம் விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ் விஜயம்

விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ் விஜயம்

by ilankai

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்குமார கமகே , யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனுடன் இணைந்து யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கினை இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டனர்.

இதன்போது துரையப்பா விளையாட்டு  அரங்கின் தேவைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்தனர். 

குறிப்பாக ஒளியமைப்பு வசதிகள் ,பராமரிப்பு வசதிகள் மற்றும் உள்ளக அரங்கு அமைப்பதுதொடர்பாகவும் ஆராய்ந்ததோடு இதற்கான திட்ட முன்மொழிவு பொறிமுறை ஒன்றினை உருவாக்கித் தருமாறு அமைச்சர், மாவட்ட செயலரிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும்  வேலனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட காணி தொடர்பாகவும் அதனுடைய தற்போதைய நிலைமை தொடர்பாகவும்  அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.

இந்நிகழ்வில் வேலணை பிரதேச செயலாளர் க.சிவகரனும் கலந்து கொண்டார்.

Related Articles