30
வவுனியா வடக்கில் மற்றொரு நில ஆக்கிரமிப்பிற்கான காய் நகர்த்தல் ஒன்றிற்கான முன்னேற்பாடு தொடர்பில் தகவல்கள் வெளிவந்துள்ளது.
வவுனியா வடக்கில் கச்சல்சமளங்குளத்தின் காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்ட சபுமல்கஸ்கட விகாரையை அண்மித்த பகுதியில் தொல்லியல் அகழ்வு ஆரம்பமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தொல்லியல் நடவடிக்கை என்றால் சர்வ மத தலைவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து இந்த நடவடிக்கையினை தொடங்கலாமே என உள்ளுர் வாசிகள் கேள்வி எழுப்பிவருகின்ற நிலையில் கச்சல்சமளங்குளத்தின் காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்ட சபுமல்கஸ்கட விகாரையை விஸ்தரிக்க முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.