Home கொழும்பு இலங்கைப்படைகளது கடவுச்சீட்டுக்கள் பறிப்பு??

இலங்கைப்படைகளது கடவுச்சீட்டுக்கள் பறிப்பு??

by ilankai

இலங்கைப்படைகளிலிருந்து தப்பித்து ரஸ்யா உள்ளிட்ட நாடுகளது கூலிப்படைகளில் இணைவோரது எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்நிலையில் மேஜர் பதவிக்குக் கீழே உள்ள அனைத்து இலங்கை இராணுவ வீரர்களும் தங்கள் கடவுச்சீட்டுகளை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் வருண கமகே கூறுகையில், இந்த முடிவு நிர்வாக நோக்கங்களுக்காக எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

வெளிநாட்டு பயிற்சி மற்றும் அலுவலக விடயங்களுக்கான கடவுச்சீட்டுகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எந்த நேரத்திலும் கடவுச்சீட்டுகளை படைப்பிரிவுகளிலிருந்து மீட்டெடுக்கலாம் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

நிர்வாக காரணங்களுக்காக மட்டுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவச் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தினார்.

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எந்த நேரத்திலும் கடவுச்சீட்டுகளை படைப்பிரிவுகளிலிருந்து மீட்டெடுக்கலாம் என்று செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles