Home இந்தியா அதானியுடன் பேச தயராகும் அனுர அரசு!

அதானியுடன் பேச தயராகும் அனுர அரசு!

by ilankai

அதானியின் இலங்கையிலிருந்தான வெளியேற்ற அறிவிப்பின் பின்னராக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடந்துள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இந்த சந்திப்பு நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எரிசக்தி அமைச்சருக்கும் இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி கூட்டாண்மையின் பல்வேறு அம்சங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் கூறுகிறது.

இதற்கிடையில், இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இடையே சமீபத்தில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.

இலங்கையில் செயல்படுத்த திட்டமிட்டிருந்த திட்டங்களிலிருந்து அதானி நிறுவனம் விலகுவதாக அறிவித்துள்ள சூழலில் இந்த விவாதங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இலங்கை அரசாங்கம் அதானி நிறுவனத்துடன் தொடர்புடைய திட்டங்கள் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகி வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன

Related Articles