எதிர்வரும் ஏப்ரல் நடாத்தப்படவுள்ளதாக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி தேர்தல்கள் சிறப்பு ஏற்பாடுகள பிரேரணை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
அதற்கான ஒப்புதல், இன்று (14), நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது பெறப்பட்டுள்ளது.
இதனிடையே உள்ளூராட்சி சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் பிரிவு 12 (பி), அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் முன்னதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பை நாடாளுமன்றத்தில் முன்வைத்த சபாநாயகர், எஞ்சிய சரத்துகள் அரசியலமைப்புக்கு அமைவாக உள்ளதாக, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே அனுர அரசு முன்னதாக ஏப்ரலில் உள்ளுராட்சி சபை தேர்தலையும் வருட கடைசியில் மாகாணசபை தேர்தலையும் நடாத்த திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.