22
மூத்த ஊடகவியலாளர் பாரதியின் புகழுடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் , ஊடக நிறுவன ஆசிரியர்கள் , சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் ஊடக பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக அனுபவத்தை கொண்ட மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி உடல் நலகுறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.
யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் , திருநெல்வேலியில் (திண்ணை ஹோட்டலுக்கு முன்பாக) அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வியாழக்கிழமை இறுதி கிரியைகள் நடைபெறும் நிலையில் பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.