Home இலங்கை மீண்டும் மின்வெட்டு

மீண்டும் மின்வெட்டு

by ilankai

மீண்டும் மின்வெட்டு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ள நிலையில், அதன் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இன்றைய தினம் வியாழக்கிழமையும்  மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ஒரு மணித்தியாலம் மின்வெட்டு இடம்பெறும் எனவும் சரியான நேரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் பௌர்ணமி விடுமுறை காரணமாக மின்சாரத்திற்கான குறைந்த கேள்வியை பூர்த்தி செய்யக்கூடிய நிலை மின்சார சபைக்கு காணப்பட்டதால் மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Articles