Home கொழும்பு சந்தேக நபர்கள் விடுதலைக்கு தடை!

சந்தேக நபர்கள் விடுதலைக்கு தடை!

by ilankai

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களின் விடுதலை தொடர்பாக வழங்கப்பட்ட முந்தைய உத்தரவை இடைநிறுத்துமாறு சட்டமா அதிபர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க, சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவை பதவி நீக்கம் செய்யுமாறு அரசை வலியுறுத்தி எழுதிய கடித சர்ச்சைகள் மத்தியில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சந்தேக நபர்களை விடுவிப்பதற்கான தனது முந்தைய உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி 27 அன்று, சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைவருக்கு, வழக்கில் மூன்று முக்கிய சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடரப்படாது என்று தெரிவித்திருந்தார்.

கடிதத்தின்படி, முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரி பிரேம் ஆனந்த உடலகம, முன்னாள் கல்கிஸ்ஸை குற்றப்பிரிவுப் பிரிவுப் பொறுப்பதிகாரி எஸ்.ஐ. திஸ்ஸசிறி சுகதபால மற்றும் முன்னாள் டி.ஐ.ஜி. பிரசன்ன நாணயக்கார ஆகியோர் விடுவிக்கப்படக்கூடிய சூழல் இருந்தது.

அதையடுத்து, பிரதமர் ஹரிணி அமரசூரியவும், கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் குடும்பத்திற்கு நீதியைப் பெற்றுத் தருவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.

Related Articles