Home பிரான்ஸ் பாரிஸ் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு அமெரிக்கா பிரித்தானியா கையெழுத்திட மறுத்தன!

பாரிஸ் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு அமெரிக்கா பிரித்தானியா கையெழுத்திட மறுத்தன!

by ilankai

பிரான்சின் தலைநகர் பாரிசின் கிராண்ட் பலாய்ஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இந்த உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டின் முடிவில் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு திறந்த, உள்ளடக்கிய, வெளிப்படையான, நெறிமுறை, பாதுகாப்பான, உறுதியான மற்றும் நம்பகமானதாக இருக்க வேண்டும், அனைவருக்கும் சர்வதேச கட்டமைப்புகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும், மக்களுக்கும்நிலையானதாக மாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. 

இந்த உச்சி மாநாட்டின் அறிக்கையில் அமொிக்காவும், பிரித்தானியாவும் கையெழுத்திட மறுத்துவிட்டன. இதில் சீனா கையெழுத்திடாது என்று நம்பிய நிலையில் சீனா கையெழுத்திட்டது.

Related Articles