21
சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் சத்தியலிங்கத்தின் மிரட்டலினாலேயே மாவை சேனாதிராசா மரணமடைந்ததாக ரவிராஜ் சசிகலா தெரிவித்தாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ரவிராஜ் சசிகலா மறுதலித்துள்ளார்.
நான் கூறியதாக கூறப்படும் ந்த விடயங்களும் என்னால் கூறப்பட்டவையோ, எனது சொந்த முகநூலில் பகிரப்பட்டவையோ அல்ல.அதற்கு நான் பொறுப்பு கூற முடியாது.
மேலும் இவ்வாறான பல குற்றச்சாட்டுக்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக என்மீது தமிழரசு கட்சியின் ஒரு குழுவினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இவை தொடர்பாக அவர்கள் தாராளமாக சட்ட நடவடிக்கை எடுக்கலாம், அவ்வாராயின் அது எனக்கும் மிக உதவியாக இருக்கும். எனத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என ரவிராஜ் சசிகலா தெரிவித்துள்ளார்.
சீ.வீ.கே.சிவஞானம் அத்தகைய குற்றச்சாட்டொன்றை ரவிராஜ் சசிகலா மீது முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.