Home யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் – வடக்கு. கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் – வடக்கு. கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின

by ilankai
தையிட்டி-விகாரைக்கு-எதிரான-போராட்டம்-–-வடக்கு.-கிழக்கு-வலிந்து-காணாமல்-ஆக்கப்பட்ட-உறவினர்களின

தையிட்டி கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்துக்கு  வடக்கு. கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

யாழ். தையிட்டியில் தனியார் காணிகளுக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை போராட்டம் ஆரம்பமாகின்றது.

விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தி இருக்கின்றன.

இந்நிலையில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கமும் தமது முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதாக சங்கத்தின் தலைவி யோகராசா  கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தமது ஒவ்வொரு பிரச்சினைக்கு எதிராகவும் தொடர்ந்து போராடிக் கொண்டே வருகின்றனர். அந்த வகையில் தமது காணியை விடுவிக்க கோரி மக்கள் பாரிய போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

ஆகையினால் இந்தப் போராட்டத்தில் கட்சி பேதங்களை விடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும், பொது அமைப்புக்களும் அணிதிரள வேண்டும் என தெரிவித்துள்ளார். 

Related Articles