Home யாழ்ப்பாணம் கோம்பயன் மணலில் மருத்துவ கழிவுகளை எரிக்க எதிர்ப்பு

கோம்பயன் மணலில் மருத்துவ கழிவுகளை எரிக்க எதிர்ப்பு

by ilankai

யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

எரியூட்டியில் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படுவதால் அதில் இருந்து கிளம்பும் புகை காரணமாக சுவாசப் பிரச்சினை, தூர் நாற்றம் என்பன ஏற்படுவதால் அயலில் வசிக்கும் தாம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர் 

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி குறித்த விடயம் தொடர்பில் உரிய தரப்புக்களுடன் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் இழுபறி காணப்பட்டது. 

அந்நிலையில்,  ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்பில் குறித்த பகுதியில் எரியூட்டி கடந்த வருடம் உருவாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Related Articles