Home முல்லைத்தீவு முல்லைத்தீவில் மரக்குற்றிக் கடத்தல் முறியடிப்பு

முல்லைத்தீவில் மரக்குற்றிக் கடத்தல் முறியடிப்பு

by ilankai

கூழாமுறிப்பு “வி” காட்டுப்பகுதியில் தேக்கு மரம் வெட்டப்பட்டு, அதன் குற்றிகளை கடத்தத் தயாராக இருந்த கெப் வாகன சாரதி ஒருவரை ஒட்டுசுட்டான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு –  ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு “வி” காட்டுப்பகுதியில் மரக்குற்றிகளை கடத்தும் முயற்சி இடம்பெறுவதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. 

அதனையடுத்து இன்று திங்கட்கிழமை (10) அதிகாலை புதுக்குடியிருப்பு நோக்கி வாகனத்தில் கொண்டுசெல்ல தயாராக இருந்த 11 தேக்கு மரக்குற்றிகள் பொலிஸ் அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டு மரக்குற்றிகளை கடத்தும் திட்டம்  முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 29 வயதுடைய வசந்தபுரம் மன்னாகண்டலை சேர்ந்த சாரதி கெப் ரக வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Related Articles