வடக்கு மாகாணத்தில் விவசாயம், சுற்றுலாத்துறை அபிவிருத்தியின் தேவைப்பாடுகள் தொடர்பில் சீனத் தூதரகத்தின் பொறுப்பதிகாரிக்கு வடமாகாண ஆளுநர் தெரியப்படுத்தியுள்ளார்
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஜு யான்வேய் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர்.
அதன் போது. வடக்கிலுள்ள மீனவர்களை சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் அவர்கள் பல்வேறு தேவைகளை நிறைவேற்றித்தருமாறு தம்மிடம் கோரிக்கை முன்வைத்தாக சீனத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஆளுநரிடம் தெரிவித்தார். அத்துடன் தமது உதவிகள் வழங்கல்களில் எந்தவொரு பாரபட்சமும் இல்லை எனவும் கூறினார்கள்.
தொடர்ந்து ஆளுநர், வடக்கு மாகாணத்தில் விவசாயம், சுற்றுலாத்துறை அபிவிருத்தியின் தேவைப்பாடுகள் தொடர்பிலும், வடக்கில் வேலை வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலனும் பங்கேற்றார்.