மகிந்த ராஜபக்சேவின் மகன் அதிரடி கைது.. சொத்துக் குவிப்பு புகாரில் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவு நடவடிக்கை!Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 25 Jan 2025, 11:19 am
இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் இலங்கை குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். Samayam Tamilஇலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச. விளையாட்டு வீரரான இவர், இலங்கை கடற்படையில் பணியாற்றியவர். இந்நிலையில் யோஷித ராஜபக்ச சட்டவிரோதமாக சொத்து சேர்த்த வழக்கில் இலங்கை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கடந்த சில நாட்களாக விசாரித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொழும்புவில் உள்ள குற்றப்புலனாய்வு அலுவலகத்திலும் இது தொடர்பாக யோஷித ராஜபக்ச விசாரணைக்கு ஆஜரானார். இந்நிலையில் சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்த வழக்கில் யோஷித ராஜபக்சவை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அம்மாந்தோட்டை மாவட்டம் பெலியத்தில் யோஷித ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.
நிர்மல் லாட்டரியில் அதிஷ்டத்தை அள்ளி குவித்த வின்னர்ஸ் இவங்கதான்.. இன்று காருண்யா லாட்டரியில் ஜாக்பாட் யாருக்கு?
பணச் சலவைச் சட்டத்தின் கீழ் தவறு செய்ததற்கான ஆதாரங்களை முன்வைத்து, யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கதிர்காமத்தில் சர்ச்சைக்குரிய நிலம் விவகாரம் தொடர்பாக அண்மையில் சிஐடி விசாரணை மேற்கொண்டதை அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கின் கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
தினம் தினம் அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும் கேரள லாட்டரித்துறை.. காருண்யா பிளஸ் லாட்டரியில் லட்சாதிபதியான 16 பேர் இவங்கதான்!இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அதிபர் ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து யோஷித ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிரியர் பற்றிபஹன்யா ராமமூர்த்திசெய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்…. மேலும் படிக்க