மட்/பட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் சமூகக்கற்கை நிலையம் திறந்துவைப்பு.

by wp_fhdn

மட்/பட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் சமூகக்கற்கை நிலையம் திறந்துவைப்பு. on Saturday, December 28, 2024

(சித்தா)

பட்டிருப்புக் கல்வி வலயத்தின் மண்முனை தென் எருவில் பற்றுக்கோட்டத்திற்கான சமூகக்கற்கை நிலையம் இன்று (28.12.2024) மட்/பட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில்  முறைசாராக்கல்விப் பிரிவின் இணைப்பாளர் றீற்றா கலைச்செல்வனின்  ஒழுங்கமைப்பில் பாடசாலையின் அதிபர் சிறிதரனின் தலைமையில்  வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரனால்   திறந்து வைக்கப்பட்டது.  இந்நிகழ்வில் பாடசாலையின் அபிவிருத்திச் சங்கச் செயலாளர், ஆசிரியர்கள், மாணவர்கள், வழிகாட்டல் ஆலோசனை ஆசிரிய ஆலோசகர் பா.துஸ்யந்தன் ஆகியோர் கலந்துகொண்டதுடன், வளவாளர் திருமதி.நவநீதா ரகுநாதன் அவர்களால் கேக், ஐசிங், அழகுக்கலை பயிற்சி நெறியும் மாணவர்களுக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது

தொடர்புடைய செய்திகள்