Home Uncategorized அனுர குமார திசநாயக சீனா டூர்! இந்தியாவுக்கு சிக்கலா?

அனுர குமார திசநாயக சீனா டூர்! இந்தியாவுக்கு சிக்கலா?

by ilankai

அனுர குமார திசநாயக சீனா டூர்! இந்தியாவுக்கு சிக்கலா?Authored byபவித்ரன் | Samayam Tamil | Updated: 27 Nov 2024, 9:23 pm

இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக சீனாவுக்கு அரசு முறை பயணமாக செல்ல உள்ளதா தகவல்கள் வெளியாகி உள்ளது.Samayam TamilSrilanka PM china visitஇந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்றான இலங்கை கடந்த சில ஆண்டுகள் முன்பு தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக நிதிநெருக்கடியில் சிக்கியது. அப்போது ஆட்சியில் இருந்த ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராக வன்முறை வெடித்தது. இதையடுத்து நாட்டை விட்டு ராஜபக்சே குடும்பத்தினர் தப்பி சென்றனா். அந்த சமயத்தில் இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்.இதையடுத்து அவரது நடவடிக்கையால் இலங்கையில் அமைதி திரும்பியது. மேலும் வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே இலங்கையின் புதிய அதிபராக கடந்த செப்டம்பர் மாதம் தேசிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த அனுர குமார திசநாயக பதவியேற்றார். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கைக்கு தற்போது முழுநேர அதிபராக அவர் பதவியேற்று உள்ளார்.

இதையடுத்து அனுர குமார திசநாயகவுக்கு இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனா். இதையடுத்து இலங்கை மற்றும் இந்தியா இடையே நட்பு மேலும் வலுப்பெறும் எனவும், இந்திய மக்களை பாதிக்கும் செயல்களுக்கு ஒரு போது அனுமதி வழங்கப்படாது எனவும் அனுர குமார திசநாயக தெரிவித்து இருந்தார். மேலும் அவர் இந்தியாவிற்கு விரைவில் வருகை தர உள்ளதாக அந்நாட்டு அதிபர் அலுவலகம் தெரிவித்து இருந்தது.

இந்தியா சீனா இடையே…

இந்த நிலையில் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக சீனாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளதாக இலங்கை நாடாளுமன்ற செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இந்தியாவை, இலங்கை உதவியுடன் சீனா எதிர்த்து வந்தது. வேண்டுமென்றே சீனா தனது கண்காணிப்பு கப்பல்களை இலங்கை கடலோர எல்லைக்குள் சென்று நிறுத்துவது, அங்கிருந்து இந்தியாவின் எல்லைகளை கண்காணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது.

இந்தியா மற்றும் சீனா இடையே மறைமுகமான போட்டி நிலவி வருகிறது. பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி விண்வெளி உள்பட பல்வேறு துறைகளிலும் இந்தியா மற்றும் சீனா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சீனா இந்தியாவுக்கு ரகசியமான வழிகளில் தொடர்ந்து தொல்லை கொடுத்தும் வருகிறது. இந்த நிலையில் அனுர திசநாயகவின் சீனா பயண திட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆசிரியர் பற்றிபவித்ரன் நான் பவித்ரன் தேவேந்திரன். ஊடகத்துறையில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். அரசியல், கிரைம் செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. இப்போது சமயம் தமிழில் மாநில, தேசிய, உலகச் செய்திகளை வழங்கி வருகிறேன்…. மேலும் படிக்க

Related Articles