தமிழக மீனவர்களின் நெஞ்சில் நெருப்பை அள்ளிக்கொட்டிய இலங்கை அரசு.. அதிர வைக்கும் உத்தரவு!Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 20 Nov 2024, 10:57 am
தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்திக்கொள்ள அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Samayam Tamil
தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி வந்ததாக கூறி கைது செய்வது, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வது, மீன்பிடி சாதனங்களை கைப்பற்றுவது, மீனவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்துவது இலங்கை கடற்படையின் வாடிக்கையாக உள்ளது. சமீப காலமாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறை தண்டனை வழங்கும் அந்நாட்டு நீதிமன்றம் கோடி கணக்கில் அபராதமும் விதித்து வருகிறது. அதுமட்டுமின்றி சிறை தண்டனைக்கு உள்ளாகும் மீனவர்களை இலங்கை சிறையில் அடைத்து கழிவறைகளை சுத்தம் செய்ய கூறுவது அவர்களுக்கு மொட்டை அடித்து துன்புறுத்துவது என இலங்கை அரசு எல்லைத் தாண்டி செல்கிறது.
பூஜா பம்பர் லாட்டரி நெருங்கும் குலுக்கல் தேதி.. முதல் பரிசு ரூ. 12 கோடி.. மொத்தம் எத்தனை பரிசுகள்? எவ்வளவு பேருக்கு?
இந்நிலையில் தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது இலங்கை அரசு. அதாவது பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை அந்நாட்டு கடற்படை பயன்படுத்திக் கொள்ள இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இலங்கை வசம் உள்ள 13 தமிழக மீனவர்களுக்கு சொந்தமான விசைப்படகுகள் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மற்றும் மயிலிட்டி துறைமுகங்களில் நிறுத்தப்பட்டு தமிழக மீனவர்களின் படகுகளை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மன்னாரில் இருந்து 5 விசைப்படகுகள் மற்றும் யாழ்பாணத்தில் இருந்து 8 விசைப்படகுகள் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விசைப்படகும் 50 முதல் 80 லட்சம் ரூபாய் வரை மதிப்புடையது.
பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்துள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிபர் அநுர குமரா திசநாயக தலைமையிலான அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில் மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கடுமையான நடவடிக்கையை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் பற்றிபஹன்யா ராமமூர்த்திசெய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்…. மேலும் படிக்க