Home Uncategorized இலங்கையின் புதிய பிரதமரான ஹரிணி அமர சூரிய! 2-வது முறை கிடைத்த வாய்ப்பு…

இலங்கையின் புதிய பிரதமரான ஹரிணி அமர சூரிய! 2-வது முறை கிடைத்த வாய்ப்பு…

by ilankai

Authored byபவித்ரன் | Samayam Tamil | Updated: 18 Nov 2024, 5:11 pm

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமர சூரிய பதவியேற்று கொண்டார்.Samayam Tamilsrilanka PM Harini Amarasuriyaஇலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமர சூரிய பதவியேற்று கொண்டார். அவருக்கு இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனா்.இலங்கையில் அண்மையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் இலங்கை அதிபர் அனுர குமாரதிசநாயகவின் தேசிய மக்கள் சக்தி கட்சி கூட்டணிகளுடன் போட்டியிட்டது. இதில் 159 தொகுதிகளில் அக்கட்சி கூட்டணி அபார வெற்றி பெற்றது.

ஹரிணி அமர சூரிய மீண்டும் பதவியேற்றார்

இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமரை இன்று தேர்வு செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமர சூரிய மீண்டும் பதவியேற்று கொண்டார். அவருக்கு அனுர குமார திசநாயக பதவியேற்று வைத்தார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனா்.

இலங்கையின் 3 வது பெண் பிரதமர் என் பெருமையை ஹரிணி அமர சூரிய பெற்றுள்ளார். முந்தைய பிரதமர்களை போல் இல்லாமல், ஹரிணி அமர சூரிய அரசியில் பின்னணி இல்லாத குடும்பத்தை சேர்ந்தவா். ஆவார். இவருக்கு மீண்டும் இலங்கை பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவருடன் இலங்கை நாடாளுமன்ற அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர்.

இந்த முறை இலங்கை நாடாளுமன்றத்தில் 2 தமிழர்களுக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி சரோஜா சாவித்ரிக்கு மகளிர் நலத்துறை, கல்வி, சுகாதார துறை ஆகிய துறைகளும், ராமலிங்கம் சந்திரசேகரனுக்கு நீர்வளத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி ஒட்டுமொத்தமாக இலங்கை நாடாளுமன்றத்தில் 28 தமிழர்கள் இடம்பிடித்துள்ளனா்.

இலங்கையின் புதிய பிரதமரான ஹரிணி அமர சூரிய! 2-வது முறை கிடைத்த வாய்ப்பு…

அவர்களில் சிலர் அமைச்சர் பதவியை பெறுவார்கள். மேலும் சிலருக்கு முக்கிய துறைகளில் உயர் பதவிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் சரோஜா சாவித்ரி உள்பட கலைச்செல்வி மற்றும் அம்பிகா ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினராகி உள்ளனா்.

இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக, ஏற்கனவே கூறியபடி நாடாளுமன்றத்தில் இருந்து தனது மாற்றத்தை தொடங்கி உள்ளார். பெண்களுக்கு அவர் அதிகாரத்தில் முக்கியத்துவம் அளித்து இருப்பது தெரிகிறது. எனினும் அனுர குமார திசநாயகவின் எதிர்கால திட்டங்கள், அவற்றை செயல்படுத்தும் வழிகள் தான் இலங்கை அதிபர் ஆட்சியின் நிலைத்தன்மையை உறுதி செய்யும் என நிபுணர்கள் கூறுகின்றனா் .ஆசிரியர் பற்றிபவித்ரன் நான் பவித்ரன் தேவேந்திரன். ஊடகத்துறையில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். அரசியல், கிரைம் செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. இப்போது சமயம் தமிழில் மாநில, தேசிய, உலகச் செய்திகளை வழங்கி வருகிறேன்…. மேலும் படிக்க

Related Articles