Home Uncategorized இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: தமிழர் ஓட்டு யாருக்கு?

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: தமிழர் ஓட்டு யாருக்கு?

by ilankai

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: தமிழர் ஓட்டு யாருக்கு?Authored byபவித்ரன் | Samayam Tamil | Updated: 15 Nov 2024, 4:53 pm

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்கள் ஆதரவு எந்த கட்சிக்கு உள்ளது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. Samayam Tamilsrilanka electionஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்கள் ஆதரவு எந்த கட்சிக்கு உள்ளது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இலங்கையில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கட்சி உள்பட ஏராளமான கட்கள் போட்டியிட்டன. சுமார் 9 ஆயிரம் வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களம் இறங்கினா். இதனால் தேர்தல் களம் விறுவிறுப்பு பெற்றது. நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றதை தொடர்ந்து மாலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் அனுர குமார திசநாயக்க அபார வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: தமிழர் ஓட்டு யாருக்கு?

குறிப்பாக தமிழர்கள் பகுதியில் அவருக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. தமிழ் வேட்பாளர்களை காட்டிலும் அனுரகுமார திசநாயக்கவுக்கு தமிழர்கள் ஆதரவு அளித்துள்ளது இதில் தெரிகிறது. இலங்கை தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி அங்குள்ள தமிழர்களுக்கு உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான யாழ்ப்பாணம், வன்னி, நுவரேலியா, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இலங்கை அதிபர் கட்சிக்கு ஆதரவு பெறுகியது தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த முறை இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றிய நிலையில் இந்த முறை தேசிய மக்கள் சக்தி கட்சி வசமாக்கி உள்ளது. இங்கு சுமார் 80 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது. அதே சமயம் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 63 ஆயிரம் வாக்குகள் வரை பெற்று இருக்கிறது.

தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு…

இதேபோல் வன்னி தேர்தல் முடிவுகளை பார்த்தால், தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு சுமார் 40 ஆயிரம் வாக்குகளும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு 32 ஆயிரம் வாக்குகளும் கிடைத்துள்ளது. நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தி கட்சி 1.5 லட்சம் வாக்குகளை தாண்டி கைப்பற்றி உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 1 லட்சம் வாக்குகளையும், ஐக்கிய தேசிய கட்சி 65 ஆயிரம் வாக்குகளையும் பெற்று உள்ளது.

மட்டகளப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 96 வாக்குகள் பெற்று அதிக தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. அதே சமயம் தேசிய மக்கள் சக்தி கட்சி 55 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்று இருந்தது. அதேபோல் இந்த முறையும் நடந்துள்ளது.ஆசிரியர் பற்றிபவித்ரன் நான் பவித்ரன் தேவேந்திரன். ஊடகத்துறையில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். அரசியல், கிரைம் செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. இப்போது சமயம் தமிழில் மாநில, தேசிய, உலகச் செய்திகளை வழங்கி வருகிறேன்…. மேலும் படிக்க

Related Articles