இலங்கை தேர்தல்: புதிய வரலாறு படைத்த அதிபர் அனுரகுமார திசநாயக்க கூட்டணிAuthored byபவித்ரன் | Samayam Tamil | Updated: 15 Nov 2024, 4:32 pm
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அனுரகுமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கட்சி அபார வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.Samayam Tamilsrilanka electionஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அனுரகுமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. இது இக்கட்சியின் கூட்டணியை தமிழர்கள் ஏற்றதன் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது.இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. தவறான பொருளாதார நடவடிக்கைகளால் நிதி நெருக்கடியில் இலங்கை சிக்கியது. இதனால் வெடித்த வன்முறைக்கு பயந்து அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபட்சே நாட்டைவிட்டு தப்பினார். இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபரானார். இதையடுத்து இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெற்றது.
இலங்கை தேர்தல்: புதிய வரலாறு படைத்த அதிபர் அனுரகுமார திசநாயக்க கூட்டணி
இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் அனுர குமார திசநாயக்க அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்கு இந்திய பிரதமர் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனா். அனுர குமார திசநாயக்க, இந்தியாவுடன் நட்பு பாராட்ட விரும்புவதாக கூறினார். மேலும் இருநாட்டு மக்களின் நலனுக்கு போராடுவேன் எனவும் தெரிவித்தார். இதுமட்டுமின்றி இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமையை மேம்படுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 196 உறுப்பினர்கள் தேர்தல் மூலுமும், 29 உறுப்பினர்கள் பட்டியல் மற்றும் கட்சிகள் பெற்ற வாக்கு அடிப்படையிலும் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். அண்மையில் இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்டு அனுரகுமார திசநாயக்க அபார வெற்றி பெற்றார்.
இலங்கை தேர்தல் முடிவுகள்
இதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றது. அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தலுக்கு பிறகு, நேற்று மாலையிலேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே அனுரகுமார திசநாயக்க முன்னிலை பெற்று வந்தார். மேலும் அவருக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் மிக பெரியது என்றே கூறலாம். இறுதி நிலவரப்படி இலங்கை அதிபர் கட்சி மற்றும் கூட்டணி ஆகியவை இணைந்து அபார வெற்றி பெற்றுள்ளன. வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தல் முடிவுகள் பாடல் புகட்டிவிட்டதாக கூறப்படுகிறது.
ஆசிரியர் பற்றிபவித்ரன் நான் பவித்ரன் தேவேந்திரன். ஊடகத்துறையில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். அரசியல், கிரைம் செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. இப்போது சமயம் தமிழில் மாநில, தேசிய, உலகச் செய்திகளை வழங்கி வருகிறேன்…. மேலும் படிக்க