by ilankai

இலங்கையில் மாறும் காட்சிகள்.. போரின் போது புலம்பெயர்ந்த தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும்.. அதிபர் வைத்த அதிரடி கோரிக்கை!Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 13 Nov 2024, 11:25 am

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அதிபர் அநுர குமரா திசநாயகவின் அறிவிப்புகள் கவனத்தை பெற்றுள்ளன. Samayam Tamil
இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் புதிய அதிபராக அநுர குமரா திசநாயக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அப்போதைய நாடாளுமன்றத்தில் அநுர குமரா திசநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி 3 இடங்களை மட்டுமே பெற்று இருந்தது. இதனால் ஆளும் கட்சிக்கு புதிய சட்டங்களை இயற்றுவதில் சிக்கல் இருந்தது. இதையடுத்து அதிபராக பதவியேற்ற அடுத்த நாளே, நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அதிபர் அநுர குமரா திசநாயக அறிவித்தார். இந்நிலையில் நாளை மறுநாள் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அநுர குமரா திசநாயகவின் அறிவிப்புகள் பெரும் கவனத்தை பெற்றுள்ளன.

ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் முதல் பரிசை வென்றது இவங்கதான்.. இன்று 50 – 50 லாட்டரியில் ரூ. 1 கோடி யாருக்கு?

குறிப்பாக தமிழர்களுக்கு அதிபர் அநுர குமரா திசநாயக அளித்துள்ள வாக்குறுதிகள் தமிழ் மக்களிடையே அதிகம் பேசப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இலங்கை அதிபர் அநுர குமரா திசநாயக, தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, உள்ளிட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது போரின் போது புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், வடக்கைக் கட்டியெழுப்புவதற்கு மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டை விட்டு சென்ற தமிழர்கள் மீண்டும் திரும்பி தங்களின் அறிவாளும் செல்வத்தாலும் வடக்கு பகுதியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் அநுர குமரா திசநாயக.

சென்னை உட்பட தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை எப்படி? தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!
இலங்கையில் மாறும் காட்சிகள்.. போரின் போது புலம்பெயர்ந்த தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும்.. அதிபர் வைத்த அதிரடி கோரிக்கை!

தமிழர்கள் வசிக்கும் வடக்கு பகுதியில் சுதந்திரமான அமைதியான சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்த அநுர குமரா திசநாயக, அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் பரம்பரை நிலங்கள் படிப்படியாக அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து: மதுரை – புனலூர் ரயில் சேவை நீட்டிக்கப்படுமா?

மேலும் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போதைப்பொருளின் பிடியில் சிக்கியுள்ள வடக்கு பகுதியை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அநுர குமரா திசநாயக தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகவின் இந்த அறிவிப்புகள் தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. இருப்பினும் இந்த வாக்குறுதிகள் அதிபர் அநுர குமார திசநயாகவுக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்குமா என்பது நாளை தெரியவரும்.ஆசிரியர் பற்றிபஹன்யா ராமமூர்த்திசெய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்…. மேலும் படிக்க

Related Articles