Home Uncategorized எல்லை தாண்டினால் நடவடிக்கை! தமிழக மீனவர்களை எச்சரிக்கும் இலங்கை அதிபர்

எல்லை தாண்டினால் நடவடிக்கை! தமிழக மீனவர்களை எச்சரிக்கும் இலங்கை அதிபர்

by ilankai

எல்லை தாண்டினால் நடவடிக்கை! தமிழக மீனவர்களை எச்சரிக்கும் இலங்கை அதிபர்Authored byபவித்ரன் | Samayam Tamil | Updated: 11 Nov 2024, 3:33 pm

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் தமிழக மீனவர்களை எச்சரித்து உள்ளார்.Samayam Tamilsrilanka presidentஎல்லை தாண்டி வந்து மீன்பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் தமிழக மீனவர்களை எச்சரித்து உள்ளார்.இந்தியாவின் அண்டை நாடான இலங்கை அவ்வப்போது தமிழக மீனவர்களை சிறைப்பிடித்து செல்கிறது. எல்லை தாண்டி மீன்பிடித்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுகின்றனா். இந்த பிரச்சனை இன்று, நேற்று நடப்பது அல்ல. பல ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. கச்சத்தீவு தரை வார்ப்பு செய்யப்பட்ட பிறகு இந்த பிரச்சினை மிகவும் மோசமாகி வருகிறது.

எல்லை தாண்டினால் நடவடிக்கை! தமிழக மீனவர்களை எச்சரிக்கும் இலங்கை அதிபர்

இதற்கு நிரந்த தீர்வு கிடைத்துவிடாதா என்று தமிழக மீனவர்கள் ஏங்கி வருகின்றனா். ஒவ்வொரு சமயமும் மீனவர்கள் கைது செய்யப்படும்போது எல்லாம், அவர்களை விடுவிக்க கோரி தமிழக முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் தரப்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு வருகிறது. ஆனால் ஒன்றும் நடந்தபாடில்லை.

இதற்கிடையே கடந்த சில மாதங்கள் முன்பு இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அனுரகுமார திசநாயக்க என்பவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவரது அரசு அமைந்த பிறகு இருநாடுகள் இடையேயும் நட்பு ஏற்படும் எனவும், மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் எனவும் கூறப்பட்டது. ஆனால் இன்று வரை தீர்வு கிட்டியபாடில்லை. இந்த நிலையில் இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது தடுக்கப்படும் என இலங்கை அதிபர் கூறி உள்ளார்.
ஊழலில் ஊறிய ஆட்சி: பிரதமர் மோடிக்கு அருகதை கிடையாது! செல்வப்பெருந்தகை காட்டம்
சட்டவிரோதமாக வந்து மீன்பிடிப்பது தடுக்கப்படும்

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அதிபர் கூறுகையில்,” இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் வருவது தடுக்கப்படும் இலங்கையின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக வந்து மீன்பிடிப்பது தடுக்கப்படும் எனவும், இதனை தடுக்காவிட்டால் கடல் வளம், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் இலங்கையில் மாநில அரசுகள் கட்டுப்பாட்டை உள்ள தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் என்றார். மேலும் போர் காலத்தில் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வரும் தமிழர்கள் இன்றளவும் தங்கள் நிலங்களை மீட்க போராடி வருவதாக அவர் தெரிவித்தார். இலங்கையில் வாழும் தமிழர்களின் பிரச்சினை படிப்படியாக தீர்த்து வைக்கப்படும் என்றார்.ஆசிரியர் பற்றிபவித்ரன் நான் பவித்ரன் தேவேந்திரன். ஊடகத்துறையில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். அரசியல், கிரைம் செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. இப்போது சமயம் தமிழில் மாநில, தேசிய, உலகச் செய்திகளை வழங்கி வருகிறேன்…. மேலும் படிக்க

Related Articles