Home Uncategorized இலங்கை அதிபராகும் அனுர குமார திசாநாயக்க…யார் இந்த ஏகேடி?

இலங்கை அதிபராகும் அனுர குமார திசாநாயக்க…யார் இந்த ஏகேடி?

by ilankai

இலங்கை அதிபராகும் அனுர குமார திசாநாயக்க…யார் இந்த ஏகேடி?இலங்கை அதிபராகும் அனுர குமார திசாநாயக்க…யார் இந்த ஏகேடி? என்பது தொடர்பான விரிவான தகவல்களை இங்கே காணலாம்.Samayam Tamilsrilanka presidentஅனுர குமார திசாநாயக்க 1968-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்பு தேகம கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு கூலித்தொழிலாளி, அவரது தாயார் இல்லத்தரசி. மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். மாணவர் அரசியல்
அனுர குமார திசாநாயக்க தம்புத் தேகம காமினி மகா வித்தியாலயம் மற்றும் தம்புத்தேகம மத்திய கல்லூரியில் கல்வி பயின்றார். கல்லூரியிலிருந்து சிறப்பாக படித்த அவர் பல்கலைக்கழக நுழைவு தேர்வில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். பள்ளிப் பருவத்தில் இருந்து ஜே.வி.பி. கட்சியில் தீவிரமாக ஈடுபட்ட திஸாநாயக்க, 1987-ம் ஆண்டு ஜே.வி.பி.யில் இணைந்து மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

இலங்கை அதிபராகும் அனுர குமார திசாநாயக்க…யார் இந்த ஏகேடி?

மத்திய செயற்குழுவில் முக்கிய நபர்
1987-1989 ஜே.வி.பி கட்சி போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். 1987-ம் ஆண்டு முதல் முழு நேர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். 1995-ம் ஆண்டு அவர் சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராக செயல்பட்டார். மேலும் ஜேவிபியின் மத்திய செயற்குழுவில் முக்கிய நபராக நியமிக்கப்பட்டார். அவர் 1998-ம் ஆண்டு ஜே.வி.பி.யின் பொலிட் பீரோவுக்கு நியமிக்கப்பட்டார்.

ஏகேடி என்று அழைக்கப்படும் அனுர குமார திசாநாயக்க
அனுர குமார திசாநாயக்க இலங்கை அரசியலில் ஏகேடி என்று அழைக்கப்படுகிறார். அவர் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனதா விமுக்தி பெரமுனா (2014 முதல்) மற்றும் தேசிய மக்கள் சக்தி (2019 முதல்) ஆகியவற்றின் தற்போதைய தலைவரும் ஆக செயல்பட்டார். 2019-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரான இவர் மீண்டும் 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தற்போது வெற்றிக்கனியை ருசித்து இருக்கிறார். 2019-ம் ஆண்டு தேர்தல்
2019 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் 3.16% வாக்குகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அனுரகுமார திஸாநாயக்க 4,99,048 (52.25%) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச 2,10,701 (22.06%), ரணில் விக்கிரமசிங்க 1,80,983 (18.95%) வாக்குகள் பெற்றுள்ளனர்.

ஆசிரியர் பற்றிசு. கணபதி சுப்பிரமணியன்நான் கணபதி சுப்பிரமணியன். ஊடகத்துறையில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். தேசிய, சர்வதேச, சினிமா செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. இப்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்…. மேலும் படிக்க

Related Articles