Home Uncategorized இலங்கையில் 13வது சட்டத்திருத்தம்… எதிர்பார்ப்பில் தமிழர்கள்.. அனுரகுமார திஸாநாயக்க திட்டம் என

இலங்கையில் 13வது சட்டத்திருத்தம்… எதிர்பார்ப்பில் தமிழர்கள்.. அனுரகுமார திஸாநாயக்க திட்டம் என

by ilankai

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil | Updated: 23 Sept 2024, 7:03 am

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால் அண்டை நாடான இந்தியா மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. குறிப்பாக தமிழர்களின் உறவுகள் இலங்கையில் வசித்து வருவதால் அவர்களை மீள் குடியமர்த்தும் வேலைகள் நடைபெறுமா? அவர்கள் வாழ்வில் ஏற்றம் தரும் வகையில் புதிய அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.முக்கிய அம்சங்கள்: இலங்கையில் புதிய அதிபராக அனுரகுமார திஸாநாயக்க தேர்வுதமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலான நடவடிக்கைகள்சட்டப்பிரிவு 13வது திருத்தத்தை அமல்படுத்த கோரிக்கை Samayam TamilSri Lanka 13th Amendmentஇலங்கை என்றாலே ஈழத் தமிழர்களின் நினைவுகள் தான் தமிழ்நாட்டில் வசிக்கும் மக்களுக்கு முதலில் வரும். விடுதலை புலிகளின் போராட்டமும், சிங்கள அரசின் பதிலடியும், கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களும், இன்னும் மீண்டு வராத பூர்வ குடி மக்களும் எனப் பல்வேறு விஷயங்கள் வரலாறு பதிய வைத்துக் கொண்டது. இந்நிலையில் 2024 இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்று, அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆட்சி மாற்றத்தை அந்நாட்டு மக்கள் விரும்பியிருப்பது தெரியவருகிறது.

இலங்கை அதிபர் தேர்தல்மார்க்சிஸ்ட் பின்புலம் கொண்ட தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அமோக வெற்றி பெற்று புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்தியா – இலங்கை உறவில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை தமிழர்களின் நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பாரா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் சிங்கள பேரினவாதம் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவராக அனுரகுமார திஸாநாயக்க இருக்கிறார். பல்வேறு சமயங்களில் இந்தியா எதிர்ப்பு நிலைப்பாட்டையும் எடுத்துள்ளார்.
இலங்கையில் 13வது சட்டத்திருத்தம்… எதிர்பார்ப்பில் தமிழர்கள்.. அனுரகுமார திஸாநாயக்க திட்டம் என்ன?

13வது சட்டத் திருத்தம்

இவை அனைத்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. இந்நிலையில் இலங்கை தமிழர்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான 1987ஆம் ஆண்டின் 13வது சட்டத் திருத்தம் என்பது முக்கியமானது. இதை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த இடத்தில் 13வது சட்டத் திருத்தம் குறித்த பின்னணியை பார்க்க வேண்டியது அவசியம். இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே சிங்களர்கள், தமிழர்கள் மோதல் தொடங்கிவிட்டது. அடுத்தடுத்து பதவியேற்ற பிரதமர்களும் சிங்கள பேரினவாதத்தை உயர்த்தி பிடிக்கும் நபர்களாகவே இருந்தனர்.

சிங்கள மொழி

இந்நிலையில் இலங்கையில் சிங்கள மொழி தான் ஒரே ஆட்சி மொழி என்ற சட்டம் பெரும் சர்ச்சையாக மாறியது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசித்து வரும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதற்கு எதிராக பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றன. சில சமயங்களில் வன்முறைகளும் வெடித்தன. இது 70களில் தமிழ் போராட்ட இயக்கங்கள் உருவாக வழிவகுத்தது. அடுத்தடுத்து நடந்த வன்முறை சம்பவங்கள் மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.

80களில் நடந்த சண்டை

80களில் இனக் கலவரமாக மாறியது. இலங்கை ராணுவம் – விடுதலை புலிகள் இடையிலான மோதல் என்பது தொடர் கதையானது. இந்நிலையில் 1987ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி 13வது சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, நாட்டில் மாகாண சபைகளை உருவாக்கி கொள்ளலாம். இது தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் இணைக்கப்பட்டன.

இதற்கு எதிராக தமிழ் அமைப்புகள் போராடின. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று இரண்டையும் பிரித்து உத்தரவிட்டது. இருப்பினும் மாகாண சபை முறை அமல்படுத்தவில்லை. இதற்கான அனுமதியை தற்போது வரை அந்நாட்டு அரசு வழங்கவில்லை. எனவே தான் புதிதாக அமைந்துள்ள இலங்கை அரசு தமிழர்களுக்கு உதவும் வகையிலான 13வது சட்டத் திருத்தத்திற்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆசிரியர் பற்றிமகேஷ் பாபுசெய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்…. மேலும் படிக்க

Related Articles