Home Uncategorized இலங்கை அதிபர் தேர்தல்: 40 லட்சம் தமிழர்கள் வாக்கு யாருக்கு?

இலங்கை அதிபர் தேர்தல்: 40 லட்சம் தமிழர்கள் வாக்கு யாருக்கு?

by ilankai

Authored byபவித்ரன் | Samayam Tamil | Updated: 21 Sept 2024, 11:35 am

இலங்கை அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இலங்கை வாழ் தமிழர்கள் 40 லட்சம் பேரின் வாக்குகளை கவரப்போது யார் என்பதை ஆர்வத்தை உருவாக்கி உள்ளது.Samayam TamilSri Lankan presidential electionஇந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தவறான பொருளாதார நடவடிக்கைகளால் நிதி நெருக்கடியில் இலங்கை கடந்த 2 ஆண்டு முன்பு சிக்கியது. இதனால் வெடித்த வன்முறைக்கு பயந்து அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபட்சே நாட்டைவிட்டு தப்பி சென்றார். இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபரானார். அவரது ஆட்சி காலம் வருகிற நவம்பர் மாதம் நிறைவடைகிறது. இதையடுத்து இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இலங்கை அதிபர் தேர்தல்: 40 லட்சம் தமிழர்கள் வாக்கு யாருக்கு?

அதன்படி இன்று காலையில் அதிபர் தேர்தல் தொடங்கியது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிடுகிறார். சமகி ஜன பலவாகயா கட்சி சார்பில் சஜித் பிரேமதாச போட்டியிடுகிறார். மேலும் ஜனதா விமுக்தி பெரமுனா என்ற கட்சி வேட்பாளர் அனுர குமார திஸநாயக மற்றும் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே உள்பட 38 வேட்பாளர்கள் களம் இறங்கி உள்ளனர். தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த போலீஸ் மற்றும் துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காலையில் தேர்தல் தொடங்கிய 2 மணி நேரத்திற்குள் 9.7 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். கொழும்புவில் உள்ள வாக்குச்சாவடியில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே குடும்பத்தினருடன் வந்து வாக்களித்து சென்றார். இந்த தேர்தலில் 50 சதவீதத்திற்கு மேல் வாக்கு பெறுபவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
ஹிஸ்புல்லா கமாண்டர் படுகொலை: இஸ்ரேல் தாக்குதலால் பதற்றம்
இலங்கை தேர்தலை ஐரோப்பிய அதிகாரிகள் குழு கண்காணித்து வருகிறார். தேர்தல் நடைமுறைகள், வாக்குப்பதிவு, மக்கள் வருகை நடத்தை விதிகள் என அனைத்தையும் ஐரோப்பிய குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இன்று மாலை வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி, நாளை பிற்பகலுக்குள் புதிய அதிபர் அறிவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

இலங்கை மக்கள் தொகை 1.7 கோடியாக உள்ள நிலையில், இதில் 40 லட்சம் பேர் தமிழர்கள் ஆவார்கள். அவர்களின் வாக்குகள் ஒருசேர கிடைத்தால், வேட்பாளர் வெற்றி அமோகமாக இருக்கும். தற்போதுள்ள இந்திய, இலங்கை பிரச்சினைக்கு இடையே 40 லட்சம் தமிழர்களின் வாக்குகளை கவரப்போகும் வாக்காளர் யார் என்பதை மிகுந்த ஆவலை கொடுக்கிறது. ஆசிரியர் பற்றிபவித்ரன் நான் பவித்ரன் தேவேந்திரன். ஊடகத்துறையில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். அரசியல், கிரைம் செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. இப்போது சமயம் தமிழில் மாநில, தேசிய, உலகச் செய்திகளை வழங்கி வருகிறேன்…. மேலும் படிக்க

Related Articles