Home Uncategorized இலங்கை ஜனாதிபதி தோ்தல் 2024: இடைக்கால அதிபா் ரணில் விக்ரமசிங்கே தீவிர பிரச்சாரம்!

இலங்கை ஜனாதிபதி தோ்தல் 2024: இடைக்கால அதிபா் ரணில் விக்ரமசிங்கே தீவிர பிரச்சாரம்!

by ilankai

Authored byபவித்ரன் | Samayam Tamil | Updated: 26 Aug 2024, 10:32 am

இலங்கை அதிபா் தோ்தல் அடுத்த மாதம் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இடைக்கால அதிபராக உள்ள ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவா் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.Samayam TamilRanil Wickremesingheஇந்தியாவின் மிக நெருங்கிய நாடுகளில் ஒன்று இலங்கை ஆகும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. இதற்கு இலங்கை அரசின் தவறான பொருளாதார கொள்கை தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. இதனை கண்டித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்தனா். அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் அதிபா் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலக கோரி அவரது அதிபா் மாளிகையை முற்றுகையிட்டனா்.இலங்கை ஜனாதிபதி தோ்தல் 2024: இடைக்கால அதிபா் ரணில் விக்ரமசிங்கே தீவிர பிரச்சாரம்!

போராட்டத்திற்கு பயந்த கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். இதற்கிடையே ரணில் விக்ரமசிங்கே என்பவர் இடைக்கால அதிபராக தோ்வு செய்யப்பட்டார். நாடாளுமன்ற வாக்கெடுப்பில் அவா் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தோ்வு செய்யப்பட்டு இருந்தார். இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே, பல்வேறு பொருளாதார கொள்கைகளை முன்னெடுத்து இலங்கையை திவால் நிலையில் இருந்து மீட்டு கொண்டு வந்தார். அவரது சிறப்பான அரசியல் திறனால் இலங்கை பொருளாதாரம் மீண்டும் வலுப்பெற்றது. இந்த நிலையில் இலங்கையில் அதிபா் தோ்தல் செப்டம்பா் மாதம் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தோ்தலில் இடைக்கால அதிபராக உள்ள ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவா் உள்பட மொத்தம் 39 போ் அதிபா் தோ்தலில் வேட்பாளா்களாக களம் இறங்கி உள்ளனா். இதில் எதிர்க்கட்சி தலைவா் சஜித் பிரேமதாஸ், முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சேவின் மகன் நாமல் ராஜபட்சே ஆகியோரும் உள்ளனா். இதனால் இலங்கை அரசியல் களம் விறுவிறுப்பு பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளா் ரணில் விக்ரசிங்கே தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார்.

ரணில் விக்ரமசிங்கே

இந்த நிலையில் தனது பிரச்சாரத்தின்போது, “இலங்கை பொருளாதார முடக்கத்தை சந்தித்தபோது நான் திறம்பட செயல்பட்டு நாட்டு மீட்டு கொண்டு வந்தேன். அதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். மக்களின் பொருளாதாரத்தை உயா்த்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார்.

ரணில் விக்ரமசிங்கே ஏற்கனவே கடந்த 1999 மற்றும் 2005 நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிட்டு இருந்தார். எனினும் அந்த தோ்தல்களில் தோல்வியை சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இடைக்கால அதிபராக இருந்து மீண்டும் தோ்தலில் போட்டியிடும் முதல் அதிபா் ரணில் விக்ரமசிங்கே ஆவார். இலங்கை அதிபா் தேர்தலில் தமிழா்களும் சுயேச்சைகளாக களம் இறங்கி உள்ளனா்.ஆசிரியர் பற்றிபவித்ரன் நான் பவித்ரன் தேவேந்திரன். ஊடகத்துறையில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். அரசியல், கிரைம் செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. இப்போது சமயம் தமிழில் மாநில, தேசிய, உலகச் செய்திகளை வழங்கி வருகிறேன்…. மேலும் படிக்க

Related Articles