Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 15 Aug 2024, 4:06 pm
இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலில் மொத்தம் 39 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். Samayam Tamil
அண்டை நாடான இலங்கையில் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. பொருளாதார நெருக்கடிக்கு பின் இலங்கை சந்திக்க உள்ள முதல் தேர்தல் இதுவாகும். அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு எத்தனை பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்கள் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அதிபர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே உள்ளிட்ட 38 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில், 20 பேர் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்ற 18 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர். நமல் ராஜபக்சே தான் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
திருப்பதியில் இஸ்ரோ விஞ்ஞானிகள்.. நாளை விண்ணில் பாயும் எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட்.. சிறப்பு வழிபாடு!
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் 2024 அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுவை அதிகாரபூர்வமாக அளித்துள்ளேன். நாம் அனைவரும் போற்றும் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், புதிய பார்வையுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் நான் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. விலைவாசி உச்சத்திற்கு சென்றதால் ஆத்திரமடைந்த மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். மேலும் அப்போதைய அதிபர் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகைக்குள்ளும் நுழைந்து பொருட்களை சூறையாடினர்.
BreakingNews: ஆளுநர் தேநீர் விருந்தில் தமிழக அரசு பங்கேற்கும்.. தங்கம் தென்னரசு அறிவிப்பு!
இதையடுத்து ராஜபக்சே சகோதரர்கள் நாட்டை விட்டே ஓடினர். இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு அந்நாட்டின் ஆட்சியாளர்களின் தவறான நிதி கொள்கையே காரணம் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இலங்கை நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தப்போது, அதிபராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க. அவரது ஆட்சியில் இலங்கையின் பொருளாதாரம் மெல்ல மீண்டு வருகிறது.
இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளார். எதிர்கட்சியின் நாடாளுமன்றத் தலைவரான 57 வயதான தொழில் அரசியல்வாதியான பிரேமதாசவிடமிருந்தும், தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணி இளைஞர்களிடையே பிரபலமாக இருக்கும் இடதுசாரித் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடுமையான போட்டியை கொடுப்பார்கள என கூறப்படுகிறது.
Breaking News: இனிமேதான் ஆட்டமே ஆரம்பிக்கப்போகுது.. அடுத்து என்ன? குஷ்பு அதிரடி!
இலங்கை தேர்தலில் முதலில் மும்முனைப் போட்டி இருந்த நிலையில் கடந்த வாரம் மிகவும் சிக்கலான போட்டியாக மாறியது. அப்போது செல்வாக்குமிக்க ராஜபக்ச குடும்பம் விக்கிரமசிங்கவுக்கு அளித்த முக்கிய ஆதரவை நமல் ராஜபக்சேவுக்குக்காக விலக்கிக் கொண்டது. 38 வயதான நமல் ராஜபக்சேவும் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடுமையான போட்டியை கொடுப்பார் என கூறப்படுகிறது. 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையில் 17 மில்லியன் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.
இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிபர் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், அவர்களில் ஒரு பெண் கூட இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வேட்பாளர்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்ற ரத்நாயக்க வேட்பாளர்கள் தேர்தல் விதிகளை பின்பற்ற வேண்டும் எச்சரித்தார்.இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் நமல் ராஜபக்சே.. மொத்தம் 39 வேட்பாளர்கள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மேலும் வேட்பாளர்கள் பிரச்சாரங்களுக்கு உதவ எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். இலங்கை தேர்தல் வரலாற்றில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுவது இதுவே முதல் முறை ஆகும்.
ஆசிரியர் பற்றிபஹன்யா ராமமூர்த்திசெய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்…. மேலும் படிக்க