இலங்கை அதிபர் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. சரத் பொன்சேகா போட்டி!Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 26 Jul 2024, 8:39 am
இலங்கை அதிபர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Samayam Tamil
இலங்கையில் 2019 இல் நடந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சே, அதிபராக வெற்றி பெற்ார். 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து இலங்கை அதிபர், ராஜபக்சே மற்றும் பிரதமர் ஆகியோர் பதவி விலகினர்.இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கவும் பிரதமராக தினேஷ் குணவர்த்தனயும் பதவியேற்றனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கை, இந்தியா உள்ளிட்ட சில நட்பு நாடுகளின் உதவியால் தற்போதுதான் மீண்டு வருகிறது. இந்நிலையில் தற்போதைய அதிபரின் பதவிக்காலம் வரும் நவம்பர் 17 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனை முன்னிட்டு அந்நாட்டிற்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
போக்குவரத்துத்துறை குட் நியூஸ்.. வார இறுதியில் சிறப்பு பேருந்துகள்.. எங்கெங்கு இயக்கப்படும்?
இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் ஏற்கப்படும் என்று இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கையில் கடைசி கட்டப் போரின் போது ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.
தமிழ்நாடு வெதர்மேன் மழை அப்டேட்.. இங்கெல்லாம் இன்று கனமழை வெளுத்து வாங்கும்!
இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் போட்டியிட உள்ளார். 72 வயதான ரணில் விக்ரமசிங்க 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிபராக பதவியேற்றார். கடும் நிதி நெருக்கடியால் இலங்கை தவித்து வந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி உலக நாடுகளால் உற்றுநோக்கப்பட்டது. சிதைந்து போன இலங்கை பொருளாதாரத்தை சீர்படுத்திய பெருமை ரணில் விக்ரமசிங்கவையே சேரும்.
கேரளா 50 50 லாட்டரி முடிவுகள் வெளியீடு.. ஒரு கோடியை தட்டி தூக்கிய எண் இதுதான்.. இன்று காருண்யா பிளஸில் ஜாக்பாட்!
இலங்கை அதிபர் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. சரத் பொன்சேகா போட்டி!
2022 செப்டம்பரில் 70% ஆக இருந்த பணவீக்கத்தை ஜூனில் 1.7% ஆகக் குறைத்து, ரூபாயை வலுப்படுத்தி, முன்னர் நலிந்துபோன அந்நியச் செலாவணி இருப்புக்களை மீண்டும் கட்டியெழுப்பினார் ரணில் விக்ரமசிங்க. இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெறுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் 22 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 17 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றிபஹன்யா ராமமூர்த்திசெய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்…. மேலும் படிக்க