by ilankai

தந்திரமாக காய் நகர்த்தும் இந்தியா.. இலங்கை வசம் இருக்கும் ‘அந்த’ விஷயம்தான் டார்கெட் ! கிடைக்குமா.. கிடைக்காதா ? தீவிரமாகும் பேச்சுவார்த்தை ?இந்தியா மற்றும் இலங்கை இடையிலான உறவு மிகச்சிறப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில், இலங்கையிடம் இருக்கும் அந்த வலம் இந்தியாவிற்கு தேவை. அதனை கேட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது இந்தியா. Samayam Tamilதீவு நாடான இலங்கை இந்தியாவுடன் சிறப்பான உறவில் இருந்து வருகிறது சமீபத்தில் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாக வெடித்தது. ஆனாலும் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான உறவு சிறிதளவும் பிளவுப்படாமல் அதே இணக்கத்தோடு இருந்து வருகிறது. இஸ்லாமிய முறையில் ஜாதிய வேற்றுமைகளே இல்லை எனும் போது எதற்காக இட ஒதுக்கீடு? நாராயணன் திருப்பதி கேள்வி !

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கைக்கு பல உலக நாடுகள் பல ரீதியில் உதவி செய்திருந்தாலும் இந்தியாவின் உதவி மிகப் பெரியது என அந்நாட்டின் தலைவர்கள் கூறி இருக்கிறார்கள். அதிலும் சமீபத்தில் இலங்கையின் அமைச்சர்கள் இந்தியாவை பாராட்டி தள்ளுவதும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவிப்பதுமான செயல்களும் நடந்து வருகிறது.

இந்தியா நல்லா வளர்ந்திருக்கு.. எங்களுக்கும் அவங்களுக்கும் எவ்ளோ ஒற்றுமை ! பூரித்துபோன இலங்கை அமைச்சர் அலி சப்ரி

குறிப்பாக அந்நாட்டின் அமைச்சர்கள், இந்தியாவிற்காக எதையும் செய்ய தயார் என்றெல்லாம் பேசியிருந்தார்கள். அந்த வகையில் இந்தியாவிற்கு தேவைப்படும் ஒரு வளம் இலங்கையில் இருக்கிறது. அதனை கையகப்படுத்த இந்தியா தற்போது பேச்சுவார்த்தையும் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அயோத்தி ராமர் கோவிலால் இலங்கைக்கு அடித்த ஜாக்பாட்.. குஷியான அமைச்சர் ராதாகிருஷ்ணன்..

இலங்கை ஒரு தீவு நாடாகும். அதனால் அங்கு கனிம வளங்களின் தேக்கம் அதிகப்படியாக இருக்கும். அந்த வகையில் இலங்கையில் மிகுதியாக இருக்கும் கிராஃபைட் எனப்படும் காரீய சுரங்கங்களை இந்தியா கையகப்படுத்த விரும்புகிறது. இது குறித்து இலங்கையின் அரசுடன் இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இது குறித்த பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாகவும் கூறபட்டுள்ளது.தந்திரமாக காய் நகர்த்தும் இந்தியா.. இலங்கை வசம் இருக்கும் ‘அந்த’ விஷயம்தான் டார்கெட் ! கிடைக்குமா.. கிடைக்காதா ? தீவிரமாகும் பேச்சுவார்த்தை ?

ஒருபுறம் இந்தியா இலங்கையின் கிராஃபைட் சுரங்கத்தை கையகப்படுத்த பேச்சு வார்த்தை நடத்தவிருக்கிறது. மற்றொருபுறம் ஐக்கிய அரபு நாடு இலங்கையுடன் முக்கியமான கனிமங்களை பெற்று வாங்கிக்கொள்ளும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் தொங்க இருக்கிறது. கிராஃபைட் உலோகம் பேட்டரிகள் தயாரிப்பதில் மிகவும் முக்கிய மூலப்பொருளாக இருக்கிறது.

முட்டிக்கொள்ளும் இந்தியா- மாலத்தீவு.. குளிர்காயும் இலங்கை… இப்படியே போனா நாங்க வளர்ந்திடுவோம் எனும் அமைச்சர்..

இந்தியாவிற்கு கிராஃபைட் மிகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது. அந்த வகையில் இலங்கையில் அதிகப்படியாக இருக்கும் கிராஃபைடை இந்தியா கையகப்படுத்தினால் அது இலங்கைக்கு பொருளாதார ரீதியான வளர்ச்சியையும் இந்தியாவிற்கு வளம் ரீதியான வளர்ச்சியும் கொடுக்கும் என கூறப்படுகிறது.எங்களால முடியல.. நீங்களே பாத்துகோங்க.. சீனா உதவிமூலம் பெற்றதை இந்தியாவிடம் ஒப்படைத்த இலங்கை..

தற்போது கிராஃபைட் சுரங்கம் குறித்த பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து வருகிறது. இதன் அடுத்தகட்ட முடிவுகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் பற்றிராதிகா நெடுஞ்செழியன் கன்சல்டன்ட்நான் ராதிகா நெடுஞ்செழியன், ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டமும் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். செய்தியை கொடுப்பவருக்கும் செய்தியை பெறுபவருக்கு இடையில் ஒரு பாலமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படிப்பை தேர்ந்தெடுத்தேன். அதன்படி, முதுகலை பட்டம் படிக்கும்போதே மாணவ பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறேன். இப்போது முழு நேர ஊடகவியலாளராக வேலை செய்து வருகிறேன். எனது கெரியரில் முதல் வேலையாக தமிழ் சமயம் தளத்தில் அடியெடுத்தது வைத்திருக்கிறேன். இங்கு சினிமா, தொலைக்காட்சி சார்ந்த செய்திகளை கொடுத்துவருகிறேன். இதுபோக, அரசியல், வாழ்வியல் போன்ற பிரிவுகளிலும் ஆர்வம் அதிகம்…. மேலும் படிக்க

Related Articles