Home Uncategorized ஒரே அடியா உயர்த்தினா எப்புடி? அதிபரின் சம்பள உயர்வு அறிவிப்புக்கு இலங்கை தோட்ட உரிமையாளர்கள்

ஒரே அடியா உயர்த்தினா எப்புடி? அதிபரின் சம்பள உயர்வு அறிவிப்புக்கு இலங்கை தோட்ட உரிமையாளர்கள்

by ilankai

ஒரே அடியா உயர்த்தினா எப்புடி? அதிபரின் சம்பள உயர்வு அறிவிப்புக்கு இலங்கை தோட்ட உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு!Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 2 May 2024, 5:07 pm

இலங்கை அதிபர் அணில் விக்ரமசிங்க தோட்ட தொழிலாளர்களின் நாள் ஒன்றுக்காண ஊதியத்தை 1700 ரூபாய் உயர்த்துவதாக அறிவித்த நிலையில் தோட்ட உரிமையாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த முடியாது எனவும் திட்டவட்டமாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.Samayam Tamil
இலங்கை மலையக பகுதிகளில் தேயிலை, ரப்பர் வளர்ப்பு, மற்றும் கச்சா ரப்பர் உற்பத்தி உள்ளிட்ட தோட்ட வேலைகளில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இந்த தோட்ட தொழில்தான் உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் ஆவார். இந்நிலையில் இவர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.அரசுக்கும் தோட்ட உரிமையாளர்களுக்கும் இதுதொடர்பாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இந்த பேச்சு வார்த்தை தொடர்ந்து தோல்வியிலேயே முடிந்தது. தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின கூட்டம் நேற்று கொட்டக்கலையில் நடைபெற்றது.

4 கண்டெய்னர்களில் கட்டுக்கட்டாக சிக்கிய ரூ.2000 கோடி.. ஆந்திராவை அதிர வைத்த சம்பவம்!

இதில் இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்கே பங்கேற்றார். அப்போது உரையாற்றிய அவர் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து இக்கட்டான காலங்களில் இருந்தபோது மலையக மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர் என்றும் ஆனால் அவர்கள் தேயிலை உற்பத்தியில் கடுமையாக உழைத்து அன்னிய செலவாணியை உறுதி செய்தனர் என்றும் விக்ரமசிங்கே புகழாரம் சூட்டினார்.

மேலும் தோட்ட தொழிலாளர்களின் நாள் ஒன்றுக்காண சம்பளம் 1700 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி தோட்டத் தொழிலாளர்களின் நாள் ஒன்றின் சம்பளம் 70% அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலை முன்னிட்டு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக பேச்சுக்கள் எழுந்தன.

லாட்டரியில் ரூ. 10 ஆயிரம் கோடி.. புற்றுநோயால் பாதித்தவருக்கு அடித்த ஜாக்பாட்!

இலங்கையில் மலையக மக்களும் அவரது உறவினர்களும் என நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் வாக்குகளை கொண்டுள்ளனர். இந்நிலையில் அதிபரின் இந்த சம்பள உயர்வு அறிவிப்பு அவர்களின் வாக்குகளை குறிவைத்து அறிவிக்கப்பட்டதாக எதிர் கட்சிகள் தெரிவித்து வருகின்றன. தற்போது தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியமாக 1000 ரூபாய் நாள் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

சர்ச்சைக்கெல்லாம் முற்றுப்புள்ளி.. அயோத்தி ராமர் மட்டுமல்ல.. டீலா குபேர் கோவிலிலும் ஆரத்தி காண்பித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

குறைந்த தொழிலாளர் உற்பத்தித்திறன் காரணமாக இந்தியா மற்றும் கென்யாவுடன் ஒப்பிடும்போது அதிக உற்பத்தி செலவை கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. இதனால் உள்ளூர் தோட்ட நிறுவனங்கள் ஊதிய உயர்வை சமாளிப்பது சிரமம் என தெரிவித்துள்ளன. மேலும் இலங்கை பெருந்தோட்ட கம்பெனிகள் மற்றும் இலங்கை முதலாளிகள் சம்மேளனமும் தொழில்துறை அமைச்சர் மனுஷ நாணயக்கராவிடம் சம்பள உயர்வு தொடர்பான யோசனையை சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரே அடியா உயர்த்தினா எப்புடி? அதிபரின் சம்பள உயர்வு அறிவிப்புக்கு இலங்கை தோட்ட உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு!

உயர்த்தப்பட்ட இந்த தொகையை வழங்க முடியாது எனவும் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தோட்ட தொழிலாளர்களுக்கான ஊதியம் அதிபர் ரனில் விக்ரமசிங்க அறிவித்தபடி அதிகரிக்கப்படுமா? அல்லது பேச்சுவார்த்தை மூலம் குறைக்கப்படுமா என்பது விரைவில் தெரியவரும்.

ஆசிரியர் பற்றிபஹன்யா ராமமூர்த்திசெய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்…. மேலும் படிக்க

Related Articles