Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 24 Apr 2024, 3:51 pm
இலங்கையில் இருந்து தமிழகத்தின் தனுஷ்கோடி வரை நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்ற 78 வயது முதியவர் நடுக்கடலில் மாரடைப்பால் மரணமடைந்தார். Samayam Tamil
இலங்கையின் தலைமன்னாரிலிருந்து ராமேஸ்வரத்தின் தனுஷ்கோடி வரை நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்த நீச்சல் போட்டியில் பங்கேற்ற 31 வீரர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் கடந்த 22 ஆம் தேதி மேஸ்வரத்தில் இருந்து படகில் தலைமன்னாருக்குப் புறப்பட்டு இன்று அதிகாலை நீந்தத் தொடங்கினர்.அவர்களில் பெங்களூருவைச் சேர்ந்த கோபால் ராவ் என்ற 78 வயது நபர் மூன்றாவதாக நீந்திக் கொண்டிருந்ததார். போட்டி நடைபெற்று கொண்டிருந்த போதே, கோபால் ராவ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்த சக நீச்சல் வீரர்கள் அருகில் இருந்த படகில் அவரை ஏற்றினர்.
தேவையில்லாம வெளியே போகாதீங்க.. தமிழகத்தில் இன்றும் கடும் வெப்ப அலை வீசும்.. மஞ்சள் அலர்ட் விடுத்த இந்திய வானிலை மையம்!
இதையடுத்து படகில் இருந்த மருத்துவ குழுவினர் கோபால் ராவை பரிசோதனை செய்ததில் அவர் மரணமடைந்தது தெரியவந்தது. கோபால் ராவ் இறந்த செய்தியை அறிந்ததும், மற்ற வீரர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக போட்டியை ரத்து செய்து விட்டு படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்தடைந்தனர். கோபால் ராவின் உடல் பிரே பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கேரளா வாராந்திர குலுக்கலில் பெத்த பரிசு.. 50 – 50 லாட்டரிக்கான குலுக்கல்.. ரூ. 1 கோடியை அள்ளப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?
இதுகுறித்து ராமேஸ்வரம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளர். நீச்சல் வீரர்களுக்கு இந்திய மற்றும் இலங்கை அரசுகளிடமிருந்து தேவையான அனைத்து அனுமதிகளும் கிடைத்ததாகவும் ஆனால் சக வீரர் உயிரிழப்பால் வீரர்கள் போட்டியை ரத்து செய்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிக்கபோன இடத்துல இப்படியா நடக்கணும்.. கிர்கிஸ்தானில் உறைந்த நீர் வீழ்ச்சியில் சிக்கி இந்திய மருந்துவ மாணவர் பலி.. கதறும் பெற்றோர்!இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்திய 78 வயது முதியவர்.. நடுக்கடலில் மாரடைப்பால் மரணம்.. ரிலே பந்தயத்தில் சோகம்!
78 வயதிலும் தன்னம்பிக்கையுடன் நீச்சல் போட்டியில் பங்கேற்ற 78 வயது முதியவர் போட்டியில் பங்கேற்றிருந்த போதே நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் பற்றிபஹன்யா ராமமூர்த்திசெய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்…. மேலும் படிக்க