by ilankai

மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியான ஒரு சில தினங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக கச்சத்தீவு இலங்கைக்கு எப்படி சென்றது என்கிற தரவு வெளியானது. இப்போது, இந்திய அரசியல்வாதிகளை விமர்சித்து பேசியிருக்கிறார் இலங்கை அரசியல் கட்சித் தலைவர் சந்திமா விஜேகுணவர்தனா. இந்தியாவில் இன்றுமுதல் மக்களவைத் தேர்தல் துவங்கியுள்ளது. நாடு முழுவதும் 21 மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் நடந்து வருகிறது. தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியான ஒரு சில தினங்களில் இந்தியாவிடம் இருந்த கச்சத்தீவு இலங்கைக்கு போனது குறித்த தகவலை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக பெற்றார் தமிழநாடு பாஜக தலைவரும் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை.கச்சத்தீவை இந்தியாவிடம் திரும்பக் கொடுத்தாலும் அவர்களின் பிரச்சனை தீராது.. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து..

இந்த விஷயம் இந்தியாவில் மிகப்பெரிய கவனத்தை பெற்றது. மேலும், அரசியல் களத்திலும் இந்த கச்சத்தீவு விவகாரம் விமர்சிக்கும் ஆயுதமாக பயன்படுத்தபட்டது. கச்சத்தீவு குறித்து இலங்கையின் நிலைபாடுகளையும் இலங்கை அமைச்சர்கள் கூறிவருகிறார்கள். அமைச்சர் ஜீவன் தொண்டைமான், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி, இலங்கை அமைச்சரும் இலங்கை அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கச்சத்தீவு குறித்த இலங்கையில் நிலைப்பாடுகளை கூறியிருந்தார்கள்.

தேர்தல் முடிந்ததும் கச்சத்தீவை கைவிட்டுவிடுவார்கள் : இந்தியா குறித்து இலங்கை பகிரங்க குற்றச்சாட்டு..

இந்நிலையில், இலங்கை மனித நேய கட்சியின் தலைவர் சந்திமா விஜேகுணவர்தனா கருத்து தெரிவித்து இருக்கிறார். மேலும், கச்சத்தீவு குறித்து இந்திய அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்ததும் பேசமாட்டார்கள் எனவும் பேசியிருக்கிறார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்து இருக்கும் இந்த நிலையில், தமிழ்நாட்டு கடல் தொழிலாளர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலேயே இந்த கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.கச்சத்தீவு பிரச்சனை : மோதப்போகும் இருதரப்பு தமிழர்கள்.. எச்சரித்த நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர் ருத்ரகுமாரன்..

தேர்தல் நேரத்தில் இப்படியான விஷயத்தை செய்துவது இந்தியாவின் வழக்கம்தான். இந்திய பிரதமர் மோடியும் அரசியல் மேடைகளில் கச்சத்தீவு தொடர்பாக பேசி வருகிறார். 285 ஏக்கர் பரப்பாளவுக கொண்ட கச்சத்தீவு இலங்கை மட்டுமல்லாது இந்தியாவின் கடல்சார் தொழிலாளர்களுக்கு அவர்களது தொழிலுக்கு பல நன்மைகள் இருக்கிறது. அதனால்தான், இந்திய அரசியல்வாதிகள் கச்சத்தீவை அவர்கள்வசம் ஈர்க்க முயற்சி செய்து வருகிறார்கள்.கச்சத்தீவு பற்றி இந்தியா இப்போது பேசவேண்டிய அவசியமே இல்லை.. இலங்கை அமைச்சர் அலி சப்ரி பளீச் !!

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு தேவையான வரலாற்று ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. கச்சத்தீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடினால் அதனை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அந்த ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கையை எடுப்போம். எனினும், இந்த விவகாரத்தினால் இலங்கை இந்தியா உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் முரண்பாட்டை செய்யவும் நாங்கள் தயாராக இல்லை.

ஏனென்றால், அயல் நாடாக இருக்கும் இந்தியா இலங்கைக்கு எக்கச்சக்கமான உதவிகளை செய்துள்ளது. குறிப்பாக, கொரோனா காலக்கட்டத்தில் இலங்கைக்கு இந்தியா பல வகையில் உதவி செய்து இருக்கிறது. இதனை எங்களால் ஒருபோது மறந்துவிட முடியாது. இந்தியாவின் உதவிக்கு எப்போதுமே நாங்கள் நன்றியோடு இருப்போம்.காசேதான் கடவுளடா, அது கடவுளுக்கே தெரியுமடா.. வாக்கு செலுத்தியதும் ராமதாஸ் விமர்சனம் !!
எனினும், கச்சத்தீவு என்பது இலங்கையில் உரிமை சார்ந்த விஷயம். ஆகவே, இதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் அவர்களது தேர்தல் பிரச்சாரத்திற்காகவே கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள். தேர்தல் முடிந்தபிறகு கச்சத்தீவை மறந்துவிடுவார்கள்” எனக் கூறியுள்ளார். இலங்கை மனிதநேய கட்சி தலைவர் சந்திமா விஜேகுணவர்தனா.

மேலும், காங்கிரஸ் மற்றும் திமுகவை கச்சத்தீவு விவகாரத்தில் குற்றம்சாட்டிய பாஜக, கச்சத்தீவை ஒப்பந்தம் மூலமாக இலங்கைக்கு கொடுத்த அரசியல் கட்சிகளான காங்கிரஸ், திமுக என யாருமே அவர்களது தேர்தல் வாக்குறுதிகளில் கச்சத்தீவு குறித்து எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் பற்றிராதிகா நெடுஞ்செழியன் கன்சல்டன்ட்நான் ராதிகா நெடுஞ்செழியன், ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டமும் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். செய்தியை கொடுப்பவருக்கும் செய்தியை பெறுபவருக்கு இடையில் ஒரு பாலமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படிப்பை தேர்ந்தெடுத்தேன். அதன்படி, முதுகலை பட்டம் படிக்கும்போதே மாணவ பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறேன். இப்போது முழு நேர ஊடகவியலாளராக வேலை செய்து வருகிறேன். எனது கெரியரில் முதல் வேலையாக தமிழ் சமயம் தளத்தில் அடியெடுத்தது வைத்திருக்கிறேன். இங்கு சினிமா, தொலைக்காட்சி சார்ந்த செய்திகளை கொடுத்துவருகிறேன். இதுபோக, அரசியல், வாழ்வியல் போன்ற பிரிவுகளிலும் ஆர்வம் அதிகம்…. மேலும் படிக்க

Related Articles